இந்தாண்டில் வெறும் 7 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி இயக்ககம் அளித்துள்ள இந்த பதிலில் 894 மருத்துவ இடங்களை அள்ளியது சிபிஎஸ்இ மாணவர்களே எனவும்,
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ரூ.20 கோடியை பள்ளி கல்வித்துறை செலவு செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.