இன்னும் 25 நாடுகளுக்கு மட்டும்தான் மோடி செல்லவில்லை: சீதாராம் யெச்சூரி

உலகில்  25 நாடுகளுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை என்றும், அடுத்த 6 மாதங்களுக்குள் அந்த நாடுகளுக்கும் சென்று வந்து விடுவார் என்றும் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளற் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நவம்பர் ரஷ்யப் புரட்சி தின சிறப்பு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் கூறியதாவது:

 அக்டோபர் புரட்சியின் முக்கியத்துவமே சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவதும், ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கு சம உரிமை வழங்குவதும் தான்.

அக்டோபர் புரட்சி மக்களுக்கு சமத்துவத்தை ஏற்படுத்தியதோடு அவர்களுக்கான கல்வி,வேலை வாய்ப்பு,அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட உதவியது.

பிரதமர் இன்னும் 25 நாடுகளுக்கு மட்டுமே பயணம் செய்யவில்லை.  தேர்தலுக்கு இன்னும் 6மாத காலம் உள்ளதால் உடனடியாக அந்த நாடுகளுக்கும் சென்று வந்துவிடுவார். இப்படி எல்லாம் அவர் பல நாடுகள் பயணிக்க காரணம் அவர்களுடைய ஏகாதியபத்திய கொள்கைகளைப் பரப்புவதற்காக தான்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு தடையாக மோடி உள்ளார். மதங்களை அடிப்படையாக வைத்து பிளவுபடுத்தி பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.

இந்தியாவில் சாதி மாறி திருமணம் செய்தால் உடனடியாக அடித்து கொல்வது, கட்ட பஞ்சாயத்து செய்வது போன்றவை அதிகம் நடைபெற்று வருகிறது. இதை உடைத்தெறிய நாம் ஒன்று கூட வேண்டும்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்க்க நினைக்கிறது இந்த பா.ஜ.க அரசு. முத்தலாக் விவகாரத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு நியாயம் சம உரிமை வேண்டும் என்று பேசிய மோடியும், பா.ஜ.கவும் அனைத்து பெண்களும் சபரிமலைக்குள் செல்லாம் என்பதை மறுக்க பார்ப்பது ஏன்?. எனவே இந்த அரசை எதிர்த்து நாம் அனைவரும் வலுவான கூட்டனியாக ஒன்று கூட வேண்டும்.

இலங்கையில் நடைபெறும் சூழலை பற்றி இந்திய அரசு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இதற்காகதான் சர்வதேச ஒற்றுமையை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

நாடாளுமன்றத்திலிருந்து அனைத்து துறைகளையும் முடக்குகிறது. 12 லட்சம் கோடிகளை கடனாக கொடுத்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ரபேல் குறித்த தகவலை உச்சநீதிமன்றம் கேட்டபோதும் வழங்கவில்லை. ஊழலையே சட்டமயமாக்க கூடிய அரசாக மோடி அரசு செயல்படுகிறது.

மோடி, அமித்ஷா பெயர் மட்டுந்தான் நமக்கு தெரிகிறது. இந்த பெயர்களை மட்டுந்தான் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் :

சீதாராம் யெச்சூரி ஸ்டாலினை சந்தித்த போது ஐந்து தொகுதியை பேரம் பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதுகுறித்து சீதாராம் யெச்சூரியிடம் கேட்டால் அப்படியா என்பார்.

ஒரே குறிக்கோள் மத்தியில் உள்ள மோடி அரசை வீழ்த்துவது தான். இந்நிலையில் பா.ஜ.கவுக்கு எதிராக திரளும் அணியை உடைக்க மோடி அரசு திட்டமிட்டு பணியாற்றி வருகின்றது.

பாஜக அரசை எதிர்ப்பது தான் ஒரே நோக்கம் என்பதை மட்டுமே ஸ்டாலினுடனான சந்திப்பின் போது யெச்சூரி உறுதிப்படுத்தினார்.

 

வால்மார்ட்டால் வீழ்த்தப்பட்ட ப்ளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால்: பாலியல் குற்றம் உட்பட பல புகார்களை சுமத்தி வெளியேற்றியது

சென்னையில் பரவலாக மழை…

Recent Posts