முக்கிய செய்திகள்

ஊனுயிர் : மேனா. உலகநாதன்

 
வெயிலில் கருகும்
வாழ்வில் இருந்து
உருகி வழிகிறது
ஊன்
 
உனக்கது தாழ
முடியாத துர் நாற்றம்
 
எனக்கு அது
மட்டுமே
ஜீவன்
நனையக் கிடைத்த
ஈரம்
 
நினத்தின்
கதகதப்பில்
நிம்மதியாய்
வாய்த்தது
நீடு துயில்