அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் சென்று சந்தித்தாா்.
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சா் செந்தில் பாலாஜி அண்மையில் அமமுகவில் இருந்து பிரிந்து சென்று தி.மு.க.வில் இணைந்தாா்.
இந்நிலையில் அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை இன்று சந்தித்தாா்.
அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 சட்டப்பேரவை உறுப்பினா்களும் சென்றிருந்தனா்.
இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுயைில், அமமுக வளா்ச்சியை கண்டு ஆளும் கட்சியையும் தாண்டி எதிா்க்கட்சி அச்சம் கொண்டுள்ளது. அமமுகவில் யாரும் அதிருப்தியில் இல்லை.
போா் நடக்கும் போது ஒருவா் புறமுதுகிட்டு ஓடிவிட்டாா் என்றால் போா் நின்றுவிடுமா? சிலா் விலகிவிடுவதால் கட்சி போய்விடும் என்றால், உலகில் எந்த கட்சியும் இருக்காது.
6 மாத காலம் சசிகலாவை யாரும் சந்திக்கவில்லை. அதனால் தான் பாா்க்க வந்தோம்.
என்னுடன் இணைந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களும் சசிகலாவை பாா்க்க ஆசைப்பட்டனா்.
அதனால் அனைவரும் இணைந்து வந்தோம் என்று தொிவித்துள்ளாா்.