முக்கிய செய்திகள்

பயந்த படியே பொருளாதாரம் படுத்திருச்சே…: சிதம்பரம் நக்கல் ட்விட்!

P.chdambaram critics on Slodown

நாட்டின் பொருளாதாரம் தாம் தெரிவித்த அச்சத்தின் படியே தொடர் சரிவைச் சந்தித்து வருவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவருமான  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், 2014-15, 2015-16, 2016-17 என மூன்று நிதியாண்டுகளிலும் பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக சரிந்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இன்னும் இந்தியா அதிவேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாகவே ஆளும் தரப்பினர் கூறிக் கொண்டிருக்கப் போகிறார்களா  எனவும் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கும் போது எப்படி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று  வினவியுள்ள அவர், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக இவர்கள் அளித்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார்கள் எனவும் கிண்டலடித்துள்ளார். வளர்ந்துவிட்டதாக  வாய்ச்சவடால் அடிப்பதை விட்டு விட்டு, வளைந்து குனிந்து, வளர்ச்சிக்கான வேலைகளைச் செய்ய வேண்டும் எனவும் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.