
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செப்டம்பர்-16ம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் 77 -வது பிறந்ததினத்தை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் திரு.மாங்குடி தலைமையில் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினர்.

விழாவில் திரைப்பட இயக்குனர் சாய் சிதம்பரம், கொத்தமங்கலம் காந்தி, காரைக்குடி நகர தலைவர் பாண்டி மெய்யப்பன் மற்றும் கே.டி.குமரேசன், , உள்ளிட்ட ஏராளாமான காங்கிரஸ் நிர்வாகிகள்,தொண்டர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் மாவட்ட மகளிர் அணி சார்பில் கலா அவர்கள் ப.சிதம்பரம் பற்றி அருமையான கவிதை ஒன்றை வாசித்தார்.

முன்னதாக நேற்று காலையில் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதானை ஏற்பாடுகளை இயக்குனர் சாய் சிதம்பரம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதங்களை வழங்கினார்.
செய்தி & படங்கள்
சிங்தேவ்