முக்கிய செய்திகள்

“பேக்கேஜிங் பொருட்களுக்கு தட்டுப்பாடு” : நடவடிக்கை எடுக்க கனிமொழி வலியுறுத்தல்…

தமிழகத்தில், உணவு மற்றும் மளிகை பொருட்களை, பேக்கெஜ் செய்வதற்கான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி, கனிமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

ஊரடங்கு காரணமாக பேக்கேஜிங் பொருட்களை தயாரிக்கும் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு விலக்கு அளித்திருந்தும், தமிழகத்தில் நெருக்கடி நிலவுவதாக கூறியுள்ளார்.

இதன் காரணமாக, உணவு மற்றும் மளிகைப் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் கனிமொழி கேட்டுக் கொண்டுள்ளார்.