முக்கிய செய்திகள்

பத்மாவத் தடை : தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு..


சில மாநிலங்களில் பத்மாவத் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. தீபிகா படுகோன் நடித்துள்ள பத்மாவத் திரைப்படத்தில் ராஜஸ்தானின் சித்தூர் அரசி பத்மினியின் வரலாற்றைத் திரித்துக் கூறியுள்ளதாகக் கூறி அதற்கு ராஜ்புத் இனத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பத்மாவத் திரைப்படத்தை ஜனவரி 25ஆம் தேதி திரையிட அந்தப் படத்தின் தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் படத்தைத் திரையிட்டால் சட்டம் ஒழுங்குச் சிக்கல் ஏற்படும் எனக் கூறி ராஜஸ்தான், அரியானா, மத்தியப் பிரதேச மாநிலங்களில் பத்மாவத் திரைப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப் படத்தின் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வீல்கர், சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு அறிவித்துள்ளது.