முக்கிய செய்திகள்

பத்மாவதி திரைப்படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..


பத்மாவதி திரைப்படத்துக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. முதலமைச்சர்கள் போன்ற உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் பத்மாவதி திரைப்பட விவகாரங்களில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
படத்தை ஆய்வு செய்து திரையிட உகந்ததா இல்லையா என முடிவு செய்வது மத்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் சுதந்திரம் என்று தெரிவித்த நீதிபதிகள், திரைப்படத் தணிக்கைத் துறையின் முடிவு நிலுவையில் இருக்கும் போது படம் குறித்து கருத்து தெரிவிப்பது தணிக்கைக் குழுவின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நீதிபதிகள் கூறினர்.