பாகிஸ்தானின் தோஷாகானா தேசிய கருவூலத்தில் இருந்த பொருட்களை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமர் என்ற முறையில் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை விற்று பணமாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. சவுதி இளவரசரிடம் இருந்து குறைந்த விலையில் நகை வாங்கி ஆதாயமடைந்ததாக இம்ரான்கான் மீது குற்றச்சாட்டு வந்தது. அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.