முக்கிய செய்திகள்

பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காலணி வீச்சு..


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசினார். அப்போது பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், ஷெரீப்புக்கு எதிராக கோஷம் எழுப்பினார். பின்னர் நவாஸ் ஷெரீப் மீது காலணியை வீசினார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.