முக்கிய செய்திகள்

பாக்., சிறையிலிருந்து 145 இந்திய மீனவர்கள் விடுதலை..


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 145 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 291 இந்திய மீனவர்கள் இரண்டு கட்டங்களாக விடுதலை செய்யப்படுவார்கள் என அந்நாடு கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் முதல்கட்டமாக விடுதலை செய்யப்படும் 145 மீனவர்கள், விரைவில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 146 மீனவர்கள் ஜனவரி 8 ம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.