முக்கிய செய்திகள்

பாக்., மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு…

பாகிஸ்தானின் லாகூர் நகரில் மசூதி அருகே காவல்துறையினரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில், புகழ்பெற்ற சூஃபி மசூதி அருகே நேற்று காலை குண்டு வெடித்தது. இதில் போலீசார் 4 பேர் உயிரிழந்தனர், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இன்று காலை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.