முக்கிய செய்திகள்

பாக்., மண்ணில் இருந்து அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்த தீவிரவாதக் குழுக்களை அனுமதிக்க மாட்டோம் : இம்ரான் கான்…

பாகிஸ்தான் மண்ணில் இருந்து அண்டை நாடுகளில் தாக்குதல் நடத்த தீவிரவாதக் குழுக்களை அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் அழுத்தம், புல்வாமா தாக்குதலையடுத்து இந்தியாவின் அதிரடி நடவடிக்கை ஆகியவற்றால் பாகிஸ்தான் அரசு கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான்கான், தீவிரவாதம் பாகிஸ்தானில் வேரூன்ற கடந்த கால ஆட்சியாளர்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

இதனிடையே லாகூரில் உள்ள ஹபீஸ் சையத்தின் ஜமாத் உத் தாவா அலுவலகத்தை பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.