
பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புகழ் பெற்ற முருகனின் அறுபடை வீடுகளில் 3-ஆம் வீடான பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது, மாற்று மதத்தை சார்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் தனி பதிவேடு வைக்க வேண்டும் என்றும் சாமி மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எடுத்த பின் கோயிலுக்குள் செல்லலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.