பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான திரு ஆவினன் குடி என்று அழைக்கப்படும் பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தைப்பூச கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வரும் 27-ம் தேதியும், தேரோட்டம் 28-ம் தேதியும் நடைபெறுகிறது.

தைப்புச திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் பாதயாத்திரை தொடங்கி நடந்து வருகின்றனர். 400 ஆண்டுகளுக்கு தேவகோட்டை நகரத்தார் காவடிகள் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றன.

இதுபோல் சேலம் எடப்பாடியிலிருந்தும் காவடிகள் யாத்திரையாக வரவுள்ளன. ஒரு நாளைக்கு 25000 பக்தர்களை அனுமதிக்க அறநிலையத்தறை முடிவெடுத்துள்ளது. ஆன்லையன் மூலமாக பக்தரகள் சாமி தரிசனம் செய்ய பதிவு செய்து வருகின்றனர்.

சசிகலாவுக்கு கரோனாவுடன் கடும் நிமோனியா காய்ச்சல்..

ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை..

Recent Posts