பழனியில் தைப்பூச திருவிழா :கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது..,

பழனி கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சாமி மலைக்கோயிலில் தைப்பூசத்திருவிழா நேற்று காலை 11 மணிக்கு மேல் மேஷ லக்னத்தில் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக விநாயகர் பூஜை, பூர்ணாகுதி போன்ற சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கொடிக்கம்பம் முன்பு மத்தளம் போன்ற வாத்திய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகம், கேரள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக வந்து கொண்டிருக்கின்றனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு..

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா :பொள்ளாச்சி கிளையின் 85-ஆம் ஆண்டு விழா..

Recent Posts