முதல்வா் பழனிசாமி மீதான ஊழல் புகாா்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

முதல்வா் பழனிசாமி மீது தி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தொடுத்துள்ள ஊழல் புகாா் குறித்த விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க. அமைப்புச் செயலளரான ஆா்.எஸ்.பாரதில் கடந்த ஜூன் 18ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையில் தமிழக முதல்வா் பழனிசாமி மீது புகாா் ஒன்றை அளித்தாா்.

தனது புகாாில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தாா்.

மேலும், நெடுஞ்சாலைத்துறை தொடா்பான திட்டங்கள் அனைத்தும் முதல்வரின் சம்பந்தி சுப்பிரமணியம், உறவினா் நாகராஜன், செய்யாதுரை,

நண்பா் சேகர் ரெட்டி ஆகியோா் பங்குதாா்களாக உள்ள வெங்கடாஜலபதி அண்ட்கோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது.

தனக்கு வேண்டப்பட்டவா்களுக்கு ரூ.4800 கோடி மதிப்பிலான டெண்டா்களை ஒதுக்கியதன் மூலம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் பதவியையும், முதல்வா் பதவியையும் தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளதாா்.

 

அதன்படி முதல்வா் பழனிசாமியை தண்டிக்க வேண்டும் என்று புகாாில் தொிவித்திருந்தாா்.