முக்கிய செய்திகள்

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மீண்டும் அவகாசம்!

பான் எனப்படும் நிரந்தரக் கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் மீண்டும் வரும் மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையின் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நேற்று இரவு பிறப்பித்த உத்தரவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரந்தரக் கணக்கு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும் வருமான வரி தாக்கலின் போதும் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக நீட்டிக்கப்பட்டு வந்த காலஅவகாசம் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க 2019ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சகத்தின், நேரடி வரிகள் வாரியத்துக்கான சார்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

​PAN-Aadhaar linking deadline extended again till March 2019