முக்கிய செய்திகள்

“உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாது” : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..

உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் சூழல் இப்போது இல்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் உள்ளாட்சித் தேர்தலை தற்போது நடத்தத முடியாது சூழல் என தமிழக அரசு கூறியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற முடியவில்லை என தமிழக அரசு கூறியுள்ளது.