உள்ளாட்சித் தேர்தல் : புதிய மசோதா தாக்கல்..

மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மீண்டும் மக்களே தேர்வு செய்யும் வகையில் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது கவுன்சிலர்களின் பெரும்பான்மை அடிப்படையில் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை அமலில் உள்ளது. இந்த மசோதா மூலம் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்ந்தெடுப்பார்கள்.

நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை கடந்த 2015-ம் ஆண்டு வரை நேரடியாக மக்களே தேர்வு செய்து வந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி, இந்த முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களின் பெரும்பான்மை அடிப்படையில் தலைவரை தேர்வு செய்யும் முறை தற்போது அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த முறையில் மீண்டும் மாற்றம் கொண்டுவருவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபை இன்று தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்ய இந்த மசோதா வகை செய்கிறது.

இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி சிவனுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து..

தலைமை நீதிபதி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது வழக்குப்பதிவு..

Recent Posts