முக்கிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு…


வார்டு மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வார்டு வரையறை செய்யக்கோரி 1.3 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே வார்டு சீரமைப்பு பணி முடிய 2 மாதத்துக்கு மேல் ஆகலாம் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனையடுத்து, வாரடு மறுவரையறை தொடர்பாக 15 நாளில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.