பாலியல் புகார்களை விசாரிக்க ராஜ்நாத்சிங் தலைமையில் குழு!

பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

நாடு முழுவதும்  #MeToo என்ற பாலியல் கொடுமைகளுக்கு எதிரான சமூகவலைத்தள இயக்கம் வலுவடைந்து வருகிறது. இதன் மூலம் பல பெண்கள், தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்து புகார்கூறி வருகின்றனர். இதில், முன்னாள் மத்திய அமைச்சர், திரையுலக பிரபலங்கள் என பலர் மீதும் புகார் கூறப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, இது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில், பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி, மேனகா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்ட ரீதியான வழிமுறைகளை இந்த குழு பரிந்துரைக்கும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

panel headed by Rajnath Singh to look into sexual harassment at workplace

 

அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் லோக் ஆயுக்தா நடைமுறைக்கு வரும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா,ஹிலாரி விட்டிற்கு வந்த வெடிகுண்டு பார்சலால் பரபரப்பு…

Recent Posts