
குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவி தங்கப் பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார் . விகே புரம் அக்,28.கடந்த2023_2024 ஏப்ரலில் நடைபெற்ற நெல்லை பல்கலை கழகதேர்வில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவி மகாலட்சுமி வேதியியல் துறையில் தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள 53 கல்லூரிகளில் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் வேதியல் துறையில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவி மகாலட்சுமி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.

நேற்று முன்தினம் நெல்லையில் நடந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு கவர்னர் ரவி கலந்து கொண்டு மாணவி மகாலட்சுமிக்கு தங்கப்பதக்கத்தையும் பட்டமளிப்பு சான்றிதழையும் வழங்கி பாராட்டினார்.

தங்கப்பதக்கம் பெற்ற மாணவியை கல்லூரி செயலர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கல்லூரி முதல்வர் ரவிசங்கர் கல்லூரி நிர்வாக அதிகாரி சுந்தரம் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பாராட்டினார்கள்.
செய்தி& படங்கள்
சிங்தேவ்