பசும்பொன் தேவர் குருபூஜை : தங்க கவசம் ஒப்படைப்பு..

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த தினம் வரும் அக்டோபர் 30-ந்தெதி கொண்டாடப்படவுள்ளது .

இதையொட்டி பசும் பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவரின் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அணிவிக்க தங்க கவசம், கிரீடத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் ஒப்படைத்துள்ளார்.

தங்க கவசத்தை தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாளிடம் ஓபிஎஸ் ஒப்படைத்துள்ளார்.

மதுரை அண்ணாநகர் வங்கி லாக்கரில் இருந்த 13.5 கிலோ தங்க கவசம், கிரீடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.