பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 122 வது ஜெயந்தி விழா உற்சாக கொண்டாட்டம்……

தேசியமும்,தெய்வீகமும் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த சுதந்திர போராட்டவாதியும், நேதாஜியின் நண்பருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த தினத்தை தேவர் ஜெயந்தியாக ஆண்டு தோறும் கொண்ணடாடப்பட்டு வருகிறது.

அவரின் 112 பிறந்ததினம் இன்று.பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்தி மற்றும் 57ஆவது குருபூஜை விழா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற்று வருகிறது.

இதை முன்னிட்டு, பசும்பொன்னில் 8 ஆயிரத்து 500 போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செய்தார்.

இதே போல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள், மழையையும் பொருட்படுத்தாது பால் குடம் சுமந்து ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினர்.

சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த தேவரின் புகைப்படத்திற்கு முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர் தூவினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் மதிமுக பொதுச் செயலாளரும், எம்.பியுமான வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

ரூ.125 மதிப்பிலான நாணயம் : அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்..

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாளை இந்தியா வருகை..

Recent Posts