
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 5 வரை ‘தமிழ் வார விழா’ நடத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் மூலம் அறிவித்தார்.
இந்த விழா பள்ளி கல்லுாரிகளில் பேச்சு மட்டும் கட்டுரை போட்டிகள் நடத்தி கொண்டாடப்படும் என்றார், மேலும் இளம் படைப்பாளிகளுக்கு பாவேந்தர் விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்.
