பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் மூத்த பத்திரிக்கையாளர்களின் செல்போன் உளவுபார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுக்கேட்பு தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உச்சநீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்துள்ளார். பெகாசஸ் விவகாரம் இந்தியா முழுவதும் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கின்ற வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் மூத்த பத்திரிக்கையாளரும் சென்னையை சேர்ந்த என்.ராம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2016, 2017, 2018-ம் ஆண்டுகளில் பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் எதிர்கட்சித் தலைவர்கள் போன்ற முக்கிய பிரமுகர்களில் தொலைப்பேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது என்றும், அரசியல் சாசனத்தக்கு எதிரான செயல் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெளியேவும், நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இந்த மழைக்கால கூட்டத் தொடரில் முழுமையாக செயல்பட முடியாத சூழலில் இரந்து வருகிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பாக இதுவரை உச்சநீதிமன்றத்தில் 5 பேர் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். இந்த நிலையில் தான் மூத்த பத்திரிக்கையாளும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் இந்ந பிரச்சனையை பொறுத்தவரை உச்சநீதிமன்றம் உடனடியாக அமர்வு நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணையை தொடங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அப்போது தான் இந்த விவகாரத்தில் உண்மை நிலை தெரியவரும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.