இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநிலங்களில் வேலைக்கு சென்ற மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பிள்ளை குட்டிகளுடன் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இந்த பயணத்தில் அவர்களுக்கு போதுமான உணவு வசதியோ, தங்கும் வசதியோ செய்துதரப்படவில்லை. இதன்காரணமாக பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு உணவு மற்றும் சுகாதார வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஆஜராகிய மத்திய அரசு வக்கீல், பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், சமூக வலைத்தளங்களும் செய்திகளை வெளியிடுவதற்கு முன் அவற்றை தணிக்கை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார்.
இப்போதைய ஊரடங்கு மூன்று மாதங்கள் வரை நீடிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியிடப்படுவதாலேயே மக்கள் மொத்தமாக வெளியேறுகின்றனர் என்று அவர் கூறினார்.
ஆனால், அவருடைய கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.