
வெடித்த மக்கள் போராட்டத்தால் இலங்கை அதிபர் மாளிகை முற்றுகையிடப்பட்டதால் அதிபர் கோத்தபயா ராஜபக்ச தப்பியோடிய நிலையில் இலங்கை பிரதமர் ரணில் பதவி விலகத் தயார் என அறிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று (9 ஜூலை) தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததனர்.
அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை (8 ஜூலை) இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
சிறிது நேரத்திற்கு முன்பு பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்திற்குள்ளும் நுழைந்ததாக செய்தி வெளியானது