பேரறிவாளன் உட்பட 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்..


திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

27வருடங்களாக சிறையிலிருக்கும் இவர்களை விடுதலை செய்ய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி உடனடி முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.