முக்கிய செய்திகள்

பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

சேலம் விமான நிலையத்தில் பேட்டி அளித்த முதல்வர எடப்பாடி பழனிச்சாமி , பெட்ரோல் மீதான வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பெட்ரோல் மீதான வாட் வரியை குறைப்பது பற்றி தமிழக அரசு சிந்திக்கும் என்று கூறிய அவர் தெரிவித்தார்.

மேகதாதுவில் எக்காரணத்தை கொண்டும் அணை கட்டக் கூடாது என்றும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது என்றும் அவர் கூறினார்.

மேலும் குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது; குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் பழனிசாமி இவ்வாறு பதில் அளித்துள்ளார்.