பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் குறைந்தது…

சென்னையில் பெட்ரோல் விலை 50 பைசா குறைந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலைகளை நாள்தோறும் மாற்றியமைக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய் 40 காசாக இருந்த நிலையில்

இன்று 50 காசுகள் குறைக்கப்பட்டு 74 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகிறது.

கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் பெட்ரோல் விலை சுமார் 1 ரூபாய் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு நேற்று 70 ரூபாய் 26 காசுகளாக இருந்த நிலையில் இன்று 20 காசுகள் குறைந்து 70 ரூபாய் 6 காசுகளுக்கு விற்பனையாகிறது.