முக்கிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து சிங்கம்புணரியில் முழுயடைப்பு போராட்டம்..

வரலாறு காணாத அளவு தினமும் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி முழுயடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தனர்.

தமிழகத்தில் முழுயடைப்பு போராட்டத்திற்கு திமுக உட்பட சில கட்சிகள் ஆதரவளித்தன.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பெட்ரோல்.டீசல் விலை உயர்வைக் கண்டித்து வணிக நிறுவனங்கள்,பெட்டிக் கடைகள் முழுயடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

ஆட்டோ,கார்கள் ஓடவில்லை ஒரு சில அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.