முக்கிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து காரைக்காலில் முழுயடைப்பு போராட்டம்..

பொது மக்கள் மத்தியில் தினமும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி முழுயடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தனர்.

புதுச்சேரியில் முழுயடைப்பு போராட்டத்திற்கு திமுக உட்பட சில கட்சிகள் ஆதரவளித்தனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பெட்ரோல்.டீசல் விலை உயர்வைக் கண்டித்து வணிக நிறுவனங்கள்,பெட்டிக் கடைகள் முழுயடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

தனியார் பேருந்துகள் ,ஆட்டோ,கார்கள் ஓடவில்லை ஒரு சில அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது.