முக்கிய செய்திகள்

புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார் பட்டியில் பக்தர்கள் தரிசனம்..


2018 புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் களை கட்டியது. பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்ற அதிகாலை 4.30 மணி முதல் பக்தர்கள் வரிசையில் நின்று கற்பக விநாயகரை தரிசித்து வருகின்றனர்.புத்தாண்டை முன்னிட்டு இண்று இரவு 9.30 வரை ஆலயம் திறந்திருக்கும்மென்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.