முக்கிய செய்திகள்

பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா தொடங்கியது..

2வது நாள், காலை விழாவில் ஸ்ரீ கற்பக விநாயகர் – வெள்ளி கேடகத்தில் எழுந்தருளும் காட்சி

புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது..

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்தாண்டு கரோனா தொற்றால் பக்தர்கள் இன்றி பெருவிழா நடைபெறுகிறது. நேற்று வியாழக்கிழமை கொடியேற்றப்பட்டது.

இன்று 2வது நாள், காலை விழாவில் – வெள்ளி கேடகத்தில் கற்பகம் விநாயகர் எழுந்தருளும் காட்சியளித்தார்.

வரும் 22-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறவுள்ளது. விழாவை நேரலையில் பக்தர்கள் காண வசதி செய்யப்பட்டுள்ளது.

செய்தி & படங்கள்
சாய் தர்மராஜ்