பிளாஸ்டிக் தடை காரணமாக வாழை இலைக்கு மவுசு அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சுற்றியுள்ள ஜெயமங்களம், சில்வார்பட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிடப்படுகின்றது.
இந்த பகுதிகளில் விளையும் நாலிப்பூ, சக்கை, பூவன் உள்ளிட்ட ரகங்களின் வாழை இலைகள், உணவருந்தவும், பொருட்களை பொட்டலம் கட்டுவதற்கும் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.
தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள பிளாஸ்டிக் தடை காரணமாக ஒரு கட்டு வாழை இலை 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், பிளாஸ்டிக் தடையை கொண்டுவந்த தமிழக அரசுக்கு வாழை விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.