முக்கிய செய்திகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு : அமைச்சர் செங்கோட்டையன்..

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ்-2 மதிப்பெண் ஆயிரத்து 200-ல் இருந்து 600-ஆக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ ஆகிய தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாலிதீன் பயன்படுத்துவதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

மேலும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும், ஆனால், உயர்க்கல்விக்கு 11-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே உயர்க்கல்விக்கு செல்ல பிளஸ்-2 மதிப்பெண்கள் மட்டுமே போதுமானது.

தொடர்ந்து பேசிய அவர், பிளஸ்-2 மதிப்பெண்கள் ஆயிரத்து 200-ல் இருந்து 600-ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் மன அழுத்தம் வெகுவாக குறையும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.