முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி!

PM Modi Address the media ahead of winter session

நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது:

பொதுவாக தீபாவளி அன்று குளிர்காலம் துவங்கும். ஆனால், பருவநிலை மாற்றம் காரணமாக குளிர்காலம் முழுதாக துவங்கவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இந்த தொடர் மூலம் நாட்டு மக்களுக்கு பயன்கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நாடாளுமன்றத்தில், நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதம் நடக்கும் என நம்புகிறேன். அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து நாட்டு மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும். விவாதத்தில் பங்கேற்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.