
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 7-வது கட்டமாக வாரணாசி தொகுதிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார் . 3வது முறையாக வாரணாசியில் பிரதமர் மோடி போட்டிடுவது குறிப்பிடத்தக்கது.