நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது.
இந்த திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே தொடங்க திட்டமிட்டு, அதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்த நிதி 3 தவணைகளாக வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இதற்காக 1 கோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு உள் ளனர்.
மேலும் அடுத்த ஓரிரு தினங்களில் மேலும் 1 கோடி பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தற்போது தேர்வு செய்யப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.