72 ஆவது சுதந்திரதினம்: 5ஆவது முறையாக செங்கோட்டையில் கொடியேற்றி பிரதமர் மோடி உரை

நாட்டின் 72வது சுதந்திர தின விழா வை ஒட்டி 5 ஆவது முறையாக டெல்லி செங்கோட்டைடில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் மோடி.

சுதந்திரதினம் இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டடெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். 

தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்த அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செங்கோட்டையில் 5வது முறையாக பிரதமர் மோடி கொடியேற்றி உள்ளார். தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையை ஆற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

 நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நாடு புதிய வளர்ச்சி நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. இந்த நாள் நாட்டிற்கு புதிய பலத்தை தந்துள்ளது. நாட்டின் மகள்கள் நமது நாட்டிற்கு கவரவத்தை தேடி தந்துள்ளனர். எவரெஸ்டில் மூவர்ணகொடியின் கவுரவத்தையும் பெருமையையும் இந்திர ராணுவம் பாதுகாத்து வருகிறது.


நாடாளுமன்றத்தின் செயல்பாடு ஆக்கபூர்மாக அமைந்து, நாட்டிற்கு நீதியை வழங்கி உள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு உரிமை வழங்கி உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு துணை நிற்கும். உலகில் 6வது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை இந்தியா எட்டி உள்ளதை நினைத்து வெளிநாடு வாழ் இந்தியர்களும் பெருமை கொள்கின்றனர். நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்த அனைவரையும் வணங்குகிறேன்.
மகாகவி பாரதி கூறியதை போல் எல்லோரும் நல்முறை எய்தும் நிலையை இந்தியா உலகிற்கு அளிக்கும். பல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம். நலிவடைந்தவர்களும் எந்த தடையும் இன்றி முன்னேற அரசு வழிவகை செய்துள்ளது. பா.ஜ., அரசில் வாரிசு அரசியல் இல்லை. ஜிஎஸ்டியை அமல்படுத்தும் துணிவு இருந்தது. வரி செலுத்துவோர் இந்திய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

2013 ஆண்டு பின்னோக்கி இருந்த நமது நாட்டின் வளர்ச்சி இன்று முன்னேற்றமடைந்துள்ளது.புதிய தொழில்நுட்பத்துடன் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர்.சுய வேலைவாய்ப்பை உறுதி செய்யும் முத்ரா திட்டமித்தில் 13 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் தொழிலதிபர்கள் லாபம் ஈட்டி வருகின்றனர். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் பொருளாதார ஆபத்தில் இருந்து நாடு மீண்டுள்ளது.

சாலை, வான்வெளி, கடல்வெளி ஆகிய அனைத்திலும் தன்னிறைவு அடைந்து வருகிறோம். நாட்டின் கடைக்கோடி கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புக்களால் நமது விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. இந்தியாவின் குரலை உலக நாடுகள் கேட்க துவுங்கி உள்ளன. விவசாயித்திலும் விஞ்ஞானத்தை இணைத்து வெற்றி காண்பதே இந்திய அரசின் குறிக்கோள்.

reform, perform and transform (சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்) இதுவே மத்திய அரசின் தாரகமந்திரம். 2022 க்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தியா என்ற யானை உறங்கிக் கொண்டிருந்த நிலை மாறி விட்டது. இப்போது யானை எழுந்து விட்டது. முதலீடுகள் மற்றும் தொழில்துவங்குவதற்கு ஏற்ற நாடாக இந்தியா மாறி உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி பேர் வருமைகோட்டிற்கு மேல் வந்துள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பல லட்சம் குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். நேர்மையாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இந்த ஆட்சியில் இருமடங்காகி உள்ளது. மக்கள் நலனுக்கான திட்டங்களுக்கே உங்களின் வரிப்பயணம் பயன்படுத்தப்படுகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இவ்விழாவில் பா.ஜ.க, மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் அமித்ஷா, காங்., தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவ கவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

PM Narendra Modi unfurls the tricolour at Red Fort