முக்கிய செய்திகள்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 18 வயது இளைஞன் கைது

அமெரிக்காவின் டென்வர் புறநகர் பகுதியில் பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

டென்வர் புறநகர் பகுதியில் ஸ்டீம் ஸ்கூல் ஹைலேண்ட் ரான்ச் ((STEM School Highlands Ranch)) என்ற பள்ளியில் உள்ளூர் நேரப்படி மே 7ம் தேதி மதியம் 2 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 8 மாணவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இருவர் பிடிபட்டுள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், முதற்கட்ட விசாரணையின் படி இருவரும் மாணவர்கள் என்பதும், அவர்களில் ஒருவன் 15 வயதுக்கும் குறைவான சிறுவன் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் 18 வயதுள்ள தெவோன் எரிக்சன் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க காவல்துறை அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.