முக்கிய செய்திகள்

அன்பு செழியன் மீது வழக்குப் பதிவு: கைது செய்ய காவல்துறை தீவிரம்!

சசிகுமார் மைத்துனர் அசோக்குமார் தற்கொலை தொடர்பாக வட்டித்தொழில் செய்துவரும் அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டியது உட்பட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தலைமறைவாக உள்ள அன்புச்செழியனைப் பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் ஜீவி முதல் தற்போது அசோக்குமார் வரை பலரது தற்கொலைக்கும் காரணமாக இருந்த அன்புச்செழியன் மீது இந்த முறை கடும் நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கந்துவட்டிக் காரர்கல் திரையுலகை விட்டு ஓடிவிடுங்கள் இல்லாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார். இதேபோல் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை உட்பட பலரும் கந்துவட்டி தற்கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

Police Rush to Arrest Anbuchezhiyan