முக்கிய செய்திகள்

அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை: நடிகர் அஜித் குமார்..

அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை என நடிகர் அஜித் குமார் கூறியுள்ளார்.

நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விட கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளேன்.

எனது தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே. ஒரு சராசரி பொதுஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பதே எனது உச்சக்கட்ட அரசியல் தொடர்பு.

எனது ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை.

அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதனை நான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தினை என்மேல் திணிக்க விட்டதும் இல்லை.

எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவெனில், மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதும்,

தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும், சட்டம் மற்றும் ஒழுங்கை மதித்து நடந்து கொள்வதும்

நான் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது என்று அதில் தெரிவித்து உள்ளார்.