முக்கிய செய்திகள்

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : குஷ்பு..

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.

சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, பொள்ளாச்சி விவகாரத்தை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்றார்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் வேலைவாய்ப்பு பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளதாக குஷ்பு கூறினார்.