முக்கிய செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டாஸ் ரத்து..

தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

குண்டர் சட்டம் தொடர்பான ஆவணங்கள் தெளிவாக இல்லாத காரணத்தால் இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.