பொள்ளாச்சியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வாகனஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் பொள்ளாச்சியையும் விட்டு வைக்கவில்லை மக்கள் வெயிலின் தாக்காத்தால் தவித்து வந்த நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய கனமழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்தது. இதனால் உடுமலை சாலை,பல்லடம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
கால்வாய்களில் பெருக்கெடுத்து ஓடிய நீரால் அருகில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பொள்ளாச்சியை சுற்றி ஆனைமலை, ஆழியார் பகுதிகளில் மழை பெய்தது.