முக்கிய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் சன்னதியில் குலுங்கி அழுத பொன்.ராதாகிருஷ்ணன்!

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில், இன்று கண்ணீர் சிந்தி குலுங்கி அழுதபடி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

இருமுடி கட்டி கார்களில் சபரிமலை சென்ற பொன்.ராதாகிருஷ்ணனை, காவல்துறை அதிகாரிகள் கடும் நிபந்தனைகளுக்கு பின்னரே அனுமதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,  அரசு பேருந்து மூலமாகவே சபரிமலைக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அனுப்பி வைக்கப்பட்டார். சாமி தரிசனம் செய்தபோது, பொன்.ராதாகிருஷ்ணன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு கட்டத்தில் குலுங்கியபடி அழுதுகொண்டே சாமி தரிசனம் செய்தார் பொன்.ராதாகிருஷ்ணன். இந்த வீடியோ பொன்.ராதாகிருஷ்ணனின் டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தரான தம்மை அனுமதிக்க கேரள அரசு தேவையற்ற கெடுபிடிகளைச் செய்ததாகவும், காவல்துறை உயரதிகாரிகள் தம்மை அவமதித்ததாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.